நத்தக்காடையூர் அருகே பாலம் பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை

நத்தக்காடையூர் அருகே பாலம் பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை

Update: 2021-11-30 15:44 GMT
முத்தூர், 
நத்தக்காடையூர் அருகே பாலம் பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பாலம்
 நத்தக்காடையூர் - முத்தூர் பிரதான சாலையில் அர்ச்சுனாபுரம் உள்ளது. இங்குள்ள ஓடையின் குறுக்கே தரைப்பாலம் இருந்து வந்தது. 
இந்த தரைப்பாலத்தை இடித்து அகற்றி விட்டு  ரூ.3 கோடி மதிப்பில் புதிதாக உயர் மட்ட மேம்பாலம்  கட்டப்பட்டது. 
இதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு  அந்த பாலத்தில் வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. 
இந்த பாலத்தின் இருபுறமும் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.  சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து விட்டன. 
துரித நடவடிக்கை
எனவே  சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக அர்ச்சுனாபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் இருபுறமும் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி விரைந்து முடித்து வாகனங்கள் சென்று வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்