காங்கேயம், டிச.1-
காங்கேயம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் காங்கேயம் - சென்னிமலை சாலை மற்றும் காங்கேயம் - திருப்பூர் சாலை ஆகிய முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மையத்தடுப்புகள் அமைக்கும்பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று பெய்த மழையிலும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.