ஆண்களுக்கான நவீன குடும்ப கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகனம்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகனத்தை நேற்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக ஆண்களுக்கான நவீன குடும்ப கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகனத்தை நேற்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ஸ்ரீவத்சன், சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் இளங்கோவன் (குடும்ப நலம்), லட்சுமி முரளி (காச நோய்), ஸ்ரீதேவி (தொழுநோய்) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.