ஸ்ரீவைகுண்டத்தில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

ஸ்ரீவைகுண்டத்தில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-11-30 13:46 GMT
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னன்குறிச்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 60). இவருக்கு ஆவுடையம்மாள் என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். இதில் 2 மகன்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். ஆவுடையம்மாள் கடந்த 2 ஆண்டுகளாக கணவரிடம் சண்டை போட்டு தனியாக வசித்து வருகிறார்.
மாயாண்டி மட்டும் தனியாக வசித்து வந்த நிலையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த அவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் மாயாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்