காஞ்சீபுர டாஸ்மாக் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரத்தை அடுத்த வெள்ளைகேட் டாஸ்மாக் கடை முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. காஞ்சீபுரம் மாவட்ட டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் பிரகாசம், இணைச் செயலாளர் சங்கர், ஏ.ஐடியுசி மாவட்ட செயலாளர் மூர்த்தி, விஜயகுமார் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். டாஸ்மாக் கடை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், டாஸ்மாக் பணி நிலையை கேரள மாநிலம் போல் திருத்தி மேம்படுத்த வேண்டும், இ.எஸ்.ஐ. மற்றும் தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.