சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 49 பேர் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 49 பேர் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-11-29 20:21 GMT
சேலம், நவ.30-
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 50 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15 பேர், சேலம் ஒன்றியத்தில் 10 பேர், ஆத்தூரில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுதவிர சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல், சென்னையில் இருந்து வந்த தலா 5 பேர், தர்மபுரி, திருச்சி, ஈரோட்டில் இருந்த தலா 4 பேரும் கொரோனாவுக்கு பாதிப்புக்குள்ளாகினர்.
மேலும் கேரள மாநிலத்தில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 45 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 501 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்