ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.88 ஆயிரம் சிக்கியது

ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

Update: 2021-11-29 19:54 GMT
ஆலங்குளம்:

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நேற்று பஞ்சாயத்துகளின் வரவு செலவு கணக்குகள் குறித்து தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் நெல்லை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்கால் தலைமையில் போலீசார் மாலையில் ஆலங்குளம் யூனியன் அலுவலகத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

ரூ.88 ஆயிரம் பறிமுதல்
அங்கிருந்த தணிக்கை குழுவினர் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது அங்கு கணக்கில் காட்டப்படாமல் வைத்திருந்த ரூ.88 ஆயிரத்து 680ஐ பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அங்கிருந்த ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை இரவிலும் நீடித்தது. இந்த திடீர் சோதனையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்