சொக்கநாதர் சுவாமி கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

விருதுநகர் சொக்கநாதர் சுவாமி கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

Update: 2021-11-29 19:53 GMT
விருதுநகர், 
விருதுநகரில் பழமை வாய்ந்த சொக்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் சோமவாரங்களில் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல நேற்று கோவில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி 1,008 சங்காபிஷேகம்  நடைபெற்றது. முன்னதாக லிங்க வடிவில் சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து மூலவருக்கு புனித நீரின் மூலமாக அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்