சிறுமிக்கு பாலியல் தொல்லை; தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

Update: 2021-11-29 19:40 GMT
மதுரை,

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர். இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு, தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இது தொடர்பாக புகாரின்பேரில் மேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
இந்த வழக்கு குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பளித்தார்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறும் அரசுக்கு இந்த கோர்ட்டு பரிந்துரைத்துள்ளது.

மேலும் செய்திகள்