ரூ.2 லட்சம் மோசடி செய்த செயலாளர் கைது
ரூ.2 லட்சம் மோசடி செய்த செயலாளர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் திருவாடானை திருவடிமிதியூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் செயலாளராக பொறுப்பில் இருந்து வந்துள்ளார்.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலான கால கட்டத்தில் விவசாயிகள் செலுத்திய பயிர்காப்பீடு தொகையில் 84 ஆயிரத்து 765 ரூபாய், 3 உறுப்பினர்கள் செலுத்திய கடன் தொகை 1 லட்சத்து 29 ஆயிரத்து 790 ரூபாய் என மொத்தம் ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 555-ஐ மோசடி செய்துவிட்டாராம். மேற்கண்ட சங்கத்தில் கூட்டுறவு துறை அதிகாரிகள் தணிக்கை செய்தபோது இந்த மோசடி தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் நீக்கப்பட்டார். இதுதொடர்பாக கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கோவிந்தராஜன் ராமநாதபுரம் மாவட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவேனில் வழக்குப்பதிவு செய்து சங்க செயலாளர் மணியை கைது செய்தார். பின்னர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.