விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு

Update: 2021-11-29 17:43 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற இருந்தபொதுமக்கள் குறைகேட்புக்கூட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுவை கலெக்டர்அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டுவிட்டுச்சென்றனர். அப்போது மனுஅளிக்க வந்த ஒருவாலிபர் திடீரென்று தன் உடல்மீது மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் ஓடிச்சென்று அவரை தடுத்து நிறுத்தி, உடல்மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.  விசாரணையில் அந்த வாலிபர் விக்கிரவாண்டியைச் சேர்ந்த சிவராமன்(வயது 37) என்பதும், அரசு கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைக்காததால் விரக்தி அடைந்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. அவரிடம்,கோரிக்கை எதுவாகஇருந்தாலும் மனுவாகஅளிக்கவேண்டும். இதுபோன்ற தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாதென்று போலீசார் அறிவுரைகூறி அனுப்பிவைத்தனர். 

மேலும் செய்திகள்