தொண்டி,
பலத்த மழையால் திருவாடானை ஓரியூர் சாலையில் நகரிகாத்தான் மணிமுத்தாறு தரைப்பாலத்தில் தண்ணீர் பாலத்தை மூழ்கடித்து செல்வதால் ஓரியூர் புனித அருளானந்தர் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோல் இந்த யூனியனில் உள்ள மங்கலக்குடி, சம்பூரணி, விருதன்வயல், கருமொழி, இளங்குன்றம், சேந்தனி, காட்டிய னேந்தல், குருந்தங்குடி, எஸ்.பி.பட்டினம் போன்ற பல்வேறு தொடக்கப்பள்ளிகளின் வளாகங்களிலும், சோழகன் பேட்டை அரசு உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் இந்த பள்ளிகளுக்கு விடுமுறை விடப் பட்டது. நேற்று காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் மற்ற பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின.