பட்டியில் அடைத்திருந்த 16 செம்மறி ஆடுகள் திருட்டு
பட்டியில் அடைத்திருந்த 16 செம்மறி ஆடுகள் திருடப்பட்டுள்ளது.
வெள்ளியணை
வெள்ளியணை அருகே உள்ள வெடிக்காரன்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 30) விவசாயி. இவர் விவசாயம் செய்வதுடன் செம்மறி ஆடுகள் வளர்ப்பிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 18-ந்தேதி மாலை ஆடுகளை மேய்ச்சலுக்கு பின் நொச்சிப்பட்டியில் உள்ள தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின் மறுநாள் அதிகாலையில் சென்று பட்டியில் இருந்த ஆடுகளை பார்த்த போது அதில் இருந்த மொத்தம் 25 ஆடுகளில் 16 ஆடுகளை காணவில்லை. பின் அக்கம் பக்கம் உள்பட பல இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை. இதனால் ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று இருக்கலாம் என கருதி நேற்று வெள்ளியணை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆடுகளை திருடி சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.