திண்டிவனம் பகுதியில் கனமழை அங்கன்வாடி சுவர் இடிந்து விழுந்தது
திண்டிவனம் பகுதியில் கனமழை அங்கன்வாடி சுவர் இடிந்து விழுந்தது;
திண்டிவனம்
திண்டிவனம் பகுதியில் நேற்று கன மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. தில்லையாடி வள்ளியம்மைநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கிருந்த பெயர் மற்றம் தகவல் பலகைகள், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதம் அடைந்தன. நேற்று கனமழை எச்சரிக்கையால் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் குழந்தைகள் யாரும் அங்கன்வாடிக்கு வரவில்லை. குழந்தைகளின் நலன் கருதி புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட வேண்டும், அதுவரை நல்ல பாதுகாப்பான கட்டிடத்தில் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.