காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்

காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-11-29 16:42 GMT
திருப்பூர், 
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் மதபோதகர் பியூலாசெல்வராணி வியாபாரிகளை இழிவாக பேசியதால் தமிழ்நாடு முழுவதும் வியாபாரிகள் சார்பில் அனைத்து போலீஸ்நிலையங்களிலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர ஆணையர் மற்றும் வடக்கு போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அவர்  கைது செய்யப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் ரெயில்நிலையம் அருகே குமரன் நினைவகம் முன்பு காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநிலத்தலைவர் எஸ்.வி.பூமிநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காமராஜர் மக்கள் பாதுகாப்பு மாநில இளைஞரணி செயலாளர் டி.எஸ்.முத்து,  காமராஜர் மக்கள் மன்றம் மாவட்ட தலைவர் அன்னை மாதவன், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த வியாபாரிகள்  சங்க செயல் தலைவர் என்.ஆர்.டி.வேலாயுதம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், நாடார் பேரவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம்மற்றும் இல.ஈஸ்வரன், திருப்பூர் வியாபாரிகள் சங்க பேரமைப்பு   மாவட்ட தலைவர் நெல்லை ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டன

மேலும் செய்திகள்