பொங்கலூர் அருகே குடிபோதையில் நேபாள நாட்டை சேர்ந்தவருக்கு கத்திக்குத்து

பொங்கலூர் அருகே குடிபோதையில் நேபாள நாட்டை சேர்ந்தவருக்கு கத்திக்குத்து

Update: 2021-11-29 16:30 GMT
பொங்கலூர், 
பொங்கலூர் அருகே குடிபோதையில் நேபாள நாட்டை சேர்ந்தவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக  4 பேரை போலீசார் கைது செய்தனர். 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தகராறு
பொங்கலூர் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான அட்டை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த அட்டை நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள்  தங்கி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுடன் வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வரும் நேபாளத்தை சேர்ந்த அமிர்கா மகன் ராம்பாபு (வயது32) என்பவரும் தங்கியுள்ளார். 
இந்த நிலையில் நேற்று முன் தினம் விடுமுறை என்பதால் அனைவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது வடமாநில தொழிலாளர்களுக்கும்,  தமிழக தொழிலாளர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் நேபாளத்தைச் சேர்ந்த ராம்பாபுவுக்கு கத்திக்குத்து விழுந்தது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
 4 பேர் கைது 
 இதுகுறித்து அவர் அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார்  சிவகங்கையை சேர்ந்த இருளப்பன் மகன் விக்னேஸ்வரன் (24), செல்வம் மகன் அய்யனார் (21), முத்துராஜ் மகன் மாயாண்டி (26), தர்மராஜ் மகன் அஜித்குமார் (23) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்