மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்க்கப்பட்ட மகனை மீட்க வேண்டும் சப் கலெக்டரிடம் பெற்றோர் மனு

மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்க்கப்பட்ட மகனை மீட்க வேண்டும் சப் கலெக்டரிடம் பெற்றோர் மனு

Update: 2021-11-29 16:27 GMT
பொள்ளாச்சி

மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்க்கப்பட்ட மகனை மீட்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் பெற்றோர் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம் 

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். 

இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை களை மனுவாக எழுதி கொடுத்தனர். அங்கலகுறிச்சி புதுக் காலனியை சேர்ந்த அர்சுனன் என்பவர் எனது மனைவி மற்றும் குடும்பத்தின ருடன் வந்து  கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மாவோயிஸ்டு இயக்கம் 

எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருணமாகி விட்டது. மகன் சந்தோஷ்குமார் கோவை அரசு கல்லூரியில் படித்தபோது திடீரென்று படிப்பை நிறுத்தி விட்டான். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அவனை காணவில்லை. அதன் பின்னர்தான் அவனை சிலர் மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்த்துவிட்டது எங்களுக்கு தெரியவந்தது. 

2014-ம் ஆண்டுக்கு முன்பு எங்கள் வீட்டிற்கு பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, கோவை உக்கடம், மதுரையை சேர்ந்தவர்கள் மற்றும் ஒரு டாக்டர் என பலர் வந்தனர். அவர்கள் அனைவரும் மாவோயிஸ்டு இயக்கத்துடன் தொடர்பில் இருப்பவர்கள் என்ற விவரம் எங்களுக்கு தெரியவில்லை. 

மீட்க வேண்டும் 

என் மகனை மூளை சலவை செய்து ஆயுத புரட்சிக்கு கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லாத தால் மனைவியின் வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றோம். 

தற்போது கேரளாவில் நடக்கும் சம்பவத்தை வைத்து பார்க்கும்போது எனது மகன் உயிருடன் இருக்கிறானா அல்லது இல்லையா என்பது தெரியவில்லை. 
எனவே எனது மகனை எப்படியாவது மீட்டு கொடுக்க வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

சின்ன தொப்பம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் டாஸ்மாக் கடை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. நாங்கள் அந்த தோட்டம் வழியாகதான் சென்று வருகிறோம். எனவே அங்கு டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என கூறப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்