திருப்பூரில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பூரில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-11-29 16:25 GMT
திருப்பூர், 
திருப்பூரில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வியாபாரி
திருப்பூர் காலேஜ் ரோடு சாதிக்பாட்சா நகர் செண்பகத்தோட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48). இவர் காலேஜ் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியில் சொந்தமாக பனியன் வேஸ்ட் குடோன் வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதியம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் காலேஜ் ரோடு மரக்கடை பஸ் நிறுத்தத்தில் ரோட்டோரம் மளிகை பொருட்களை வைத்து வியாபாரம் செய்தார். பின்னர். வியாபாரம் முடித்து இரவு 10.30 மணிக்கு வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தன.
15 பவுன் நகை, பணம் திருட்டு
பீரோவில் வைத்திருந்த15 பவுன்நகை, ரூ.3 லட்சத்தை காணவில்லை. மர்ம ஆசாமிகள் அவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து  திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். ராஜேந்திரன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வியாபாரம் செய்ய சென்றதை தெரிந்து கொண்ட ஆசாமிகள், அவருடைய வீட்டிற்கு சென்று கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று,  பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. 
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வந்து கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்