மொபட்டுடன் கீழே விழுந்த கட்டிட தொழிலாளி பலி

மொபட்டுடன் கீழே விழுந்த கட்டிட தொழிலாளி பலி

Update: 2021-11-29 16:00 GMT
வெள்ளகோவில், 
வெள்ளகோவில் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தில்குமார் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருடைய உறவினர் முருகேசன். இவர்கள்  2 பேரும் நேற்று முன்தினம் மொபட்டில்  தாசநாயக்கன்பட்டி சென்றனர். மொபட்டை செந்தில்குமார் ஓட்டினார். பின் இருக்கையில் முருகேசன் அமர்ந்து இருந்தார்.   பச்சாகவுண்டன் வலசு பிரிவு அருகே மொபட் சென்றபோது நிலைதடுமாறி இருவரும் மொபட்டுடன் கீழே விழுந்தனர். இதில் செந்தில்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம்  சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு முதலுதவி செய்து கொண்டு மேல் சிகிச்சைக்காக கோவை தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் நேற்று காலை இறந்துவிட்டார். இவருக்கு செந்தில்குமாருக்கு செல்வி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முருகேசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 

மேலும் செய்திகள்