தூத்துக்குடி அருகே மூதாட்டி வீட்டில் பத்தரை பவுன் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்
தூத்துக்குடி அருகே மூதாட்டி வீட்டில் பத்தரை பவுன் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் பாரதிநகரை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவருடைய மனைவி குருவம்மாள் (வயது 61). இவரது மகன், மகள் வெளியூரில் உள்ளனர். சம்பவத்தன்று குருவம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாராம். இதனால் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு, அந்த பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று விட்டாராம்.
நேற்று முன்தினம் மீண்டும் வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்க கிரில் கேட் மற்றும் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குருவம்மாள் வீட்டில் பீரோவை பார்த்து உள்ளார். அதில் இருந்த 10½ பவுன் தங்கநகைகள் மற்றும் வெள்ளி தம்ளர் உள்ளிட்ட பொருட்களை மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.