உழவர் சந்தைக்கு இடம் தேர்வு செய்யும் பணி

உழவர் சந்தைக்கு இடம் தேர்வு செய்யும் பணி

Update: 2021-11-29 14:13 GMT
கோத்தகிரி

தமிழக வேளாண் வணிகத்துறை சார்பில் கோத்தகிரி கடைவீதியில் கடந்த 2009-ம் ஆண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய உழவர் சந்தை அமைக்கப்பட்டது. தொடர்ந்து 6 மாதங்கள் மட்டுமே இந்த உழவர் சந்தை செயல்பட்டது. ஆனால் அதன்பிறகு போதிய வியாபாரம் இல்லாததால் உழவர் சந்தை மூடப்பட்டது. இதையடுத்து பலமுறை உழவர் சந்தையை திறக்க நடவடிக்கை எடுத்தும், பொதுமக்களிடம் இருந்து போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்தநிலையில் பொதுமக்களை கவர வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய உழவர் சந்தை அமைக்க புதிய இடம் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக நேற்று மாலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் வந்தார். அவர் மார்க்கெட் திடல் மற்றும் ஜீப் ஸ்டாண்டு செயல்படும் இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அதன் எதிர்புறம் காய்கறி கடைகள் செயல்பட்டு வரும் இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அந்த இடத்தை அளவீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹிம் ஷா, குன்னூர் உதவி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன், செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்