ஆற்றில் மூழ்கி கேரள வாலிபர் பலி

ஆற்றில் மூழ்கி கேரள வாலிபர் பலி

Update: 2021-11-29 14:13 GMT
கூடலூர்

எர்ணாகுளம் மாவட்டம் பாலாரி வட்டம் பகுதியை சேர்ந்த 9 வாலிபர்கள் நேற்று கூடலூருக்கு சுற்றுலா வந்தனர். இதில் 2 பேர் ஊட்டிக்கு சென்றனர். மீதமுள்ளவர்கள் தொரப்பள்ளியில் உள்ள ஒரு விடுதியில் தங்கினர். பின்னர் மாலை 3.30 மணிக்கு அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றனர். அதில் வினோத் என்பவர் எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கினார். 

இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் ஆற்றில் இறங்கி வினோத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு வினோத் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து மசினகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்