காட்டெருமைக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரிக்கை
காட்டெருமைக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரிக்கை;
கோத்தகிரி
கோத்தகிரியில் மிளிதேன் அருகே உள்ள லில்லிஹட்டி கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்காக வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமை ஒன்று, சுமார் 15 அடி உயர பாறை மேட்டில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தது. இதை கண்ட இளைஞர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். ஆனால் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பாறையில் இருந்து தவறி விழுந்த காட்டெருமை காயம் காரணமாக தீவனம் எடுத்து கொள்ள முடியாமல் அங்கேயே சுற்றித்திரிகிறது. மேலும் எலும்பும், தோலுமாக காணப்படுகிறது. அது நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருவதால், அந்த காட்டெருமைக்கு வனத்துறையினர் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர்.