வடவள்ளி
கோவை வடவள்ளியை அடுத்த பொம்மனம்பாளையத்தை சேர்ந்தவர் சித்தார்த் (வயது26). சிவில் என்ஜினீயர். சம்பவத்தன்று இரவு இவருடைய வீட்டிற்கு வந்த நண்பர்கள் 4 பேர், மது போதையில் கூச்சல், கும்மாளமிட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போருக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளனர். இதனால் சித்தார்த் அவர்களை கண்டித்துள்ளார்.
பின்னர் அவர்கள் அனைவரும் திரும்பி சென்று விட்டனர். மறுநாள் காலையில் சித்தார்த் வீட்டுக்கு வந்த அந்த நண்பர்கள் 4 பேரும், சித்தார்த்திடம் நண்பர்கள் என்றும் பாராமல் எப்படி நீ எங்களை திட்டலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வாக்குவாதம் முற்றி, மோதலாக மாறியது. அப்போது அந்த 4பேரும் ஆத்திரம் அடைந்து, சித்தார்த்தை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி மிரட்டி விட்டு சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் தாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மருதமலை ரோட்டை சேர்ந்த அஜித்குமார் (25), பொம்மனம்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (27) ஆகிேயாரை கைது செய்தனர். தலைமறைவான நீலவேந்தன், ஹரிஹரன் ஆகிய 2ேபரை தேடி வருகின்றனர்.