போரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், 300 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சென்னையை அடுத்த போரூர் பெரியபணிச்சேரி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32). வெல்டரான இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அரும்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். ராஜேசின் வீட்டிக்கு வந்த உறவினர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அவரிடம் கூறினார்கள்.
இதையடுத்து ராஜேஷ் வீட்டிக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், 300 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் ராஜேசின் வீட்டிக்கு வெளியே வைத்திருந்த புதிய காலணிகளை திருடி விட்டு தாங்கள் அணிந்து வந்த பழைய காலணிகளை போட்டு விட்டு சென்றுள்ளனர். மேலும், அதே பகுதியில் 3 இருசக்கர வாகனங்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.