கோவை
கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, நேற்று கோவை காந்திபுரம் மத்திய பஸ்நிலையம், நகர பஸ்நிலையம் உள்பட 54 -வது வார்டு பகுதிகளில் ஆய்வு நடத்தினார்.
அப்போது டவுன் பஸ்நிலைய வளாகத்தில் உள்ள மாநகராட்சி கட்டண சுகாதார வளாகத்தில் குத்தகைக்கு எடுத்த தனியார் குத்தகைதாரர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை மாநகராட்சி ஆணையாளர் கண்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். ஒப்பந்த ஆணை ரத்து செய்யப்பட்டு, அந்த நபரை கருப்பு பட்டியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.காந்திபுரம் மத்திய பஸ்நிலைய பகுதியில் மேற்கூரை உடைந்ததையும் மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு, இவற்றை உடனடியாக சரிசெய்யுமாறு உத்தரவிட்டார்.
டெங்கு கொசு ஒழிவை ஒழிக்கும் பணியை ஆய்வு செய்தார். சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக ஆய்வு செய்து அபேட் மருந்து தெளிக்கும் பணியை தீவிரப்படுத்துமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.