பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தூசி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூசி
தூசி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள மாமண்டூர் கிராமம் அசேபா தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 31). இவர் செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு கலசபாக்கம் தாலுகா பழம் கோவில் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் மகள் காயத்ரி (25) என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் குடும்பத்தில் இவர்களுக்கு அடிக்கடி பிரச்சினைகள் இருந்து வந்தாக தெரிகிறது. இன்று மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதால் மனமுடைந்த காயத்ரி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து செல்வகுமார் தனது மாமனாருக்கு போன் போன் மூலம் தெரிவித்தார்.
தந்தை பன்னீர்செல்வம் தூசி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது தூசி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் இருவருக்கும் திருமணமாகி 2 வருடங்களே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணையும் நடந்து வருகிறது.