வேப்பனப்பள்ளி அருகே சரக்கு வேன் மோதி பிளஸ்2 மாணவி சாவு

வேப்பனப்பள்ளி அருகே சரக்கு வேன் மோதி பிளஸ்2 மாணவி இறந்தார்.

Update: 2021-11-29 08:32 GMT
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள மேட்டுபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மகள் சத்தியா (வயது16).  வேப்பனப்பள்ளியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து மாணவி வீட்டுக்கு செல்வதற்காக சாலை ஓரத்தில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று மாணவி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மாணவி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தின் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சத்தியா நேற்று காலை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்