அரூர் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு பிரசாரம்
அரூர் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
அரூர்:
அரூர் அருகே உள்ள நாசம்கொட்டாய் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு காங்கிரஸ் தலைவர் சுபாஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் வேடியப்பன், ஆறுமுகம், மாவட்ட செயலாளர் வேடியப்பன், நிர்வாகிகள் சிவலிங்கம், ஜவகர், புஷ்பலிங்கம், அண்ணாமலை, அருணகிரி, பெரியகண்ணு பலர் கலந்து கொண்டனர். இதில் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.