ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்பனை
ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்பனை ஆனது.
ஈரோடு
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளும், 100-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருவதால், ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளன.
குறிப்பாக தக்காளி வரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு தக்காளி வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையானது. நேற்று சற்று விலை உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது.