ரூ.240 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

ஆலங்குளத்தில் ரூ.240 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-11-28 21:15 GMT
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில் நெல்லை - தென்காசி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள அறையை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு ஆகியோர் அடங்கிய போலீசார் சோதனை செய்தனர். அங்கு இருந்த 36 பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் மேற்பார்வையாளரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.2.40 லட்சம் ஆகும்.

மேலும் செய்திகள்