மழைக்கு வீடு இடிந்து விழுந்தது
சங்கரன்கோவில் அருகே மழைக்கு வீடு இடிந்து விழுந்தது.;
சங்கரன்கோவில்:
கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள செந்தட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமாண்டி (வயது 61). கூலித்தொழிலாளி. கடந்த சில நாட்களாக கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் ராமாண்டி தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. ஆனால் இதில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.