தண்ணீர் லாரி மோதி சித்த மருத்துவ மாணவர் சாவு

நெல்லையில் மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதியதில் சித்த மருத்துவக்கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-11-28 20:20 GMT
நெல்லை:
நெல்லையில் மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதியதில் சித்த மருத்துவக்கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

சித்த மருத்துவ மாணவர்

திருவண்ணாமலை மாவட்டம் பீமரபட்டி அக்கர பட்டியை சேர்ந்தவர் தனபால். இவருடைய மகன் செல்வமணி (வயது 23). இவர் நெல்லை சித்த மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் செல்வமணி நேற்று காலை மோட்டார் சைக்கிளில் நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

தண்ணீர் லாரி மோதி பலி

அப்போது அந்த பகுதியில் வந்த தண்ணீர் லாரி எதிர்பாராதவிதமாக செல்வமணி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட செல்வமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். செல்வமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரிதாபம்

நெல்லையில் மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதியதில் சித்த மருத்துவக்கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்