ஆலங்குளம் குவாரியில் தண்ணீர் பெருகியது

தொடர்மழையினால் ஆலங்குளம் குவாரியில் தண்ணீர் பெருகியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Update: 2021-11-28 19:32 GMT
ஆலங்குளம், 
தொடர்மழையினால் ஆலங்குளம் குவாரியில் தண்ணீர் பெருகியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
தொடர்மழை 
 ஆலங்குளம் சிமெண்டு ஆலைக்கு தேவையான சுண்ணாம்பு கல் எடுத்த பின்னர் பயன்பாட்டில் இல்லாத குவாரி உள்ளது. 
இந்த குவாரியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சிமெண்டு ஆலை வழங்கி உள்ளது. ஆலங்குளம், சங்கரமூர்த்திபட்டி, ராசாப்பட்டி, சுண்டங்குளம், அண்ணாநகர், பாரதிநகர், வசந்த் நகர், கலைஞர் நகர், எம்.ஜி.ஆர் நகர், இந்திராநகர், பெரியார்நகர், ஜெ.ஜெ. நகர், நேதாஜி நகர், இருளப்ப நகர் ஆகிய பகுதியில் வசிக்கும் இந்த குவாரியை பயன்படுத்தி வருகின்றனர். 
மக்கள் மகிழ்ச்சி 
பொதுமக்கள் குளிக்கவும், துணிகள் சலவை செய்யவும் இ்ந்த தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்தநிலையில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக குவாரியில் தண்ணீர் பெருகியது. 
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குவாரிக்கு வந்த தண்ணீரால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

மேலும் செய்திகள்