மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மண்டபத்தில் இருந்தவர்களை வெளியேற்றியதால் சாலை மறியல்
மண்டபத்தில் இருந்தவர்களை வெளியேற்றியதால் சாலை மறியல்;
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. துத்திபட்டு ஊராட்சி பாங்கி நகர் பகுதியில் வெள்ளநீர் குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இன்று (திங்கட்கிழமை) மண்டபத்தில் திருமணம் உள்ளதால் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை தற்காலிகமாக காலி செய்யும்படி மண்டப உரிமையாளர் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து வெளியேறிய பொதுமக்கள் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பாங்கி ஷாப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த உமராபாத் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.