ஆதனக்கோட்டையில் அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ஆதனக்கோட்டையில் அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை-பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-11-28 17:22 GMT
ஆதனக்கோட்டை:
நகைகள் திருட்டு 
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள கருப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி மலர் (வயது 32). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் தூங்கிக்கொண்டிருந்த மலரின் வாயில் துணியை அமுக்கி கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி 5 பவுன் தாலிச்செயினை பறித்து சென்றனர். மேலும் அதே தெருவில் ராசம்மாள் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2 கிராம் தோடு, ரூ.3 ஆயிரத்தையும், சண்முகம் என்பவரது வீட்டில் 8 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். 
இதுகுறித்து புகார்களின் பேரில், ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்