மூங்கில்துறைப்பட்டு அருகே கிணற்றில் வாலிபர் பிணம்

மூங்கில்துறைப்பட்டு அருகே கிணற்றில் வாலிபர் பிணமாக கிடந்தது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2021-11-28 16:22 GMT
மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள அரும்பராம்பட்டு பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் விவசாய கிணற்றில் வாலிபர் பிணம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள இளையனார்குப்பம் கிராமத்தை சேர்ந்த காசி மகன் செல்வகுமார் (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து செல்வக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்