சின்னசேலம் அருகே கோமாரி நோயால் கால்நடைகள் பாதிப்பு

சின்னசேலம் அருகே கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவ முகாம் நடத்தக்கோாி பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

Update: 2021-11-28 16:18 GMT
சின்னசேலம், 

சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்நாரியப்பனூர் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இணை தொழிலாக கால்நடை வளர்ப்பு தொழிலை பிரதானமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் மேல்நாரியப்பனூர் தெற்கு தெருவை சேர்ந்த முருகன் என்பவரது பசுமாடு நேற்று மர்ம நோயால் திடீரென செத்தது. இதேபோல் காட்டுக்கொட்டாய் பகுதியிலும் சில மாடுகள் மர்மநோய்க்கு செத்துள்ளன. மேலும் இக்கிராமத்தில் உள்ள பெரும்பாலான கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டு தீவனம் உண்ண முடியாமலும், நடக்க முடியாமலும் தவிக்கின்றன.  

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கோமாரி நோயால் ஏராளமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. உடல்நலக்குறைவான கால்நடைகளை சிகிச்சைக்காக 8 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சின்னசேலம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆனால் அதற்குள் சில கால்நடைகள் இறந்து விடுகின்றன. எனவே கால்நடைத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க கோமாரி நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்