கிணத்துக்கடவில் ரேக்ளா பந்தயம்

கிணத்துக்கடவில் ரேக்ளா பந்தயம்;

Update: 2021-11-28 14:50 GMT
கிணத்துக்கடவில் ரேக்ளா பந்தயம்
கிணத்துக்கடவு


கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் முத்துகவுண்டனூர் ரோட்டில்  ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.  200 மீட்டர், 300 மீட்டர் தூரத்தில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. 

இந்த போட்டியில் கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, திருப்பூர், உடுமலை, தாராபுரம், கேரளாமாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான காளை மாடுகள் கலந்துகொண்டன.

பந்தயத்தில் களம் இறங்கிய காளைகள்  சீறிப் பாய்ந்து சென்று இலக்கை நோக்கி ஓடியது. வண்டிகளில் பூட்டிய  காளைகள் சீறிபாய்ந்து சென்றதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். 

போட்டியில் முதல் இடத்தை பிடித்த காளை மாடு ஜோடிக்கு அரை பவுன் தங்க காசும், இரண்டாவது இடத்தை பிடித்த மாடுஜோடிக்கு கால் பவுன் தங்க காசும், மூன்றாம் பரிசாக ஒரு கிராம் தங்கமும் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கபட்டது.

 ரேக்ளா பந்தய போட்டியில் பாதுகாப்பு பணியில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்