பொள்ளாச்சியில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு

பொள்ளாச்சியில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு

Update: 2021-11-28 14:30 GMT
பொள்ளாச்சியில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு
பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகரம் மற்றும்சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா 2-வது அலையில்கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இந்தநிலையில், கடந்த சிலநாட்களாக எண்ணிக்கை அவ்வப்போது சற்றுஉயர்ந்து வருகிறது. 

நேற்றைய நிலவரப்படி பொள்ளாச்சி நகரில் 3 பேருக்கும்,பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 4 பேருக்கும்,பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் 2பேருக்கும்என மொத்தம் 9 பேருக்குகொரோனா உறுதிசெய்யப்பட்டது. சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் நேற்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. 

மொத்தத்தில்கொரோனா பரவல் மிகவும் குறைந்து இருந்தாலும், முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, தடுப்பூசி போடுவது போன்ற செயல்களையும், அரசின் விதிமுறைகளையும்
பொதுமக்கள் கைவிடாமல் முழுமையாககடைப்பிடிக்க வேண்டும். என, சுகாதாரத் துறையினர், வருவாய்துறையினர்பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்