வீரபாண்டி பகுதியில் மது, புகையிலை விற்ற 7 பேர் கைது
வீரபாண்டி பகுதியில் மது, புகையிலை விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
உப்புக்கோட்டை:
வீரபாண்டி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் லதா, வரதராஜன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மது விற்றதாக உப்புக்கோட்டை அருகே உள்ள காமராஜபுரம் ரைஸ்மில் தெருவை சேர்ந்த அமராவதி (வயது 65), உப்புக்கோட்டையை சேர்ந்த அய்யர் (57), லட்சுமிபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (52) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோல புகையிலை பொருட்கள் விற்ற போடேந்திரபுரம் வடக்கு தெருவை சேர்ந்த வளர்மதி (34), வீரபாண்டி மெயின் தெருவை சேர்ந்த முருகேசன் (70), வீரபாண்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த சுருளி (47) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று போலீஸ் துணை சூப்பிரண்டு (பயிற்சி) ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் வீரபாண்டியில் ரோந்து சென்றனர். அப்போது புகையிலை பொருட்கள் விற்ற வீரபாண்டியை சேர்ந்த மனோகரனை (63) போலீசார் கைது செய்தனர்.