முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஊக்கப்பரிசு
முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஊக்கப்பரிசு
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இவர்களில் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருந்து தடுப்பூசி போட வந்தவர்களுக்கு ஊக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டது.
கோத்தகிரி பேரூராட்சி சார்பில் பஸ் நிலையம், கன்னிகாதேவி காலனி, மிஷன் காம்பவுண்ட் தனியார் மருத்துவமனை, டானிங்டன் பஸ் நிறுத்தம், பேரூராட்சி அலுவலகம், காத்துக்குளி மற்றும் தவிட்டு மேடு சமுதாய நலக்கூடம், கன்னேரிமுக்கு அரசுப்பள்ளி, கேர்பெட்டா துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட 9 மையங்களில் முகாம் நடைபெற்றது. இதில் கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகீம் ஆய்வு செய்தார்.
மேலும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேருக்கு ஊக்கப்பரிசுகளை வழங்கினார். இதில் கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் பேரூராட்சி ஊழியர்கள் கையில் கொண்டு செல்லும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்பு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.