மின்கம்பங்களில் தீப்பந்தம் கட்டி போராட்டம்
மின்கம்பங்களில் தீப்பந்தம் கட்டி போராட்டம்
பந்தலூர்
பந்தலூர் அருகே உள்ள மேங்கோரேஞ்ச் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இங்கு காட்டுயானைகள், சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இதற்கிடையில் அங்குள்ள தெருவிளக்குகளும் பழுதடைந்தது. இதனால் அவற்றை பழுது நீக்க அதிகாரிகள் கழற்றி சென்றுவிட்டனர். இதுவரை அவை மீண்டும் கொண்டு வந்து பொருத்தப்படாததால், அந்த பகுதியே இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மின்கம்பங்களில் தீப்பந்தங்களை கட்டி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.