இண்டூர் அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

இண்டூர் அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-27 22:37 GMT
பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே உள்ள சின்னகாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவருடைய மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 67). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் கணவன்-மனைவி 2 பேரும் சின்னகாம்பட்டியில் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணம்மாள் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிந்தது. இதற்கு சிகிச்சை எடுத்து வந்தார்‌. இந்த நிலையில் தனக்கும், கணவருக்கும் பராமரித்து உதவி செய்ய யாரும் இல்லை என்ற ஏக்கத்தில் கிருஷ்ணம்மாள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்