சாலையில் பிணமாக கிடந்த ஜவுளி வியாபாரி

ஆலங்குளம் அருகே ஜவுளி வியாபாரி சாலையில் பிணமாக கிடந்தார்.

Update: 2021-11-27 20:46 GMT
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகேசன் (42). ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தென்காசிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் முருகேசனின் மனைவி பார்வதி (36) மற்றும் உறவினர்கள் அவரை தேடினர். இந்த நிலையில் நேற்று காலை நெல்லை - தென்காசி சாலையில் தனியார் ஓட்டலுக்கு அருகில் ஒருவர் பிணமாக கிடப்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அவரது உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், இறந்தது முருகேசன் என்பது தெரியவந்தது. மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால் அதிக மது போதையில் மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்