உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே துளாரங்குறிச்சி- இடையார் பிரிவு சாலையில் உள்ள கல்லுக்குழி ஏரியில் சுமார் 50 வயது ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சரவர்த்தி வழக்குப்பதிந்து, இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்.