தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5.40 லட்சம் கையாடல்

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5.40 லட்சம் கையாடல்;

Update: 2021-11-27 19:50 GMT
தா.பேட்டை, நவ.28-
தா.பேட்டை கடைவீதியில் தனியார் நிதி நிறுவனம்  இயங்கி வருகிறது. இதன் கிளை மேலாளராக சதீஷ் (வயது 25) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இந்த நிதி நிறுவனத்தில் அலுவலர்கள் கணக்குகளை தணிக்கை செய்யும் போது ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் தன்னிச்சையாக கிளை மேலாளர் கையாடல் செய்ததாக தெரியவருகிறது. இதுகுறித்து தனியார் நிதி நிறுவன வட்ட மேலாளர் மாதவுடு தா.பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கிளை மேலாளர் மீது வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்