பிரபல ரவுடி கொலை வழக்கு: மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

பிரபல ரவுடி கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-27 18:39 GMT
லாலாபேட்டை, 
கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த கருப்பத்தூரை சேர்ந்தவர் கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் (வயது 51). பிரபல ரவுடியான இவரை 10 பேர் கொண்ட கும்பல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெட்டிக்கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்தனர். இதில் ராஜகுமாரன், சுரேஷ், ராஜா, நந்தகுமார், சரவணன் ஆகிய 5 பேரை ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் திருச்செந்தூரை சேர்ந்த இசக்கி குமார் என்பவரை (49) மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து இசக்கி குமார் குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்