திண்டிவனத்தில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு

திண்டிவனத்தில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு

Update: 2021-11-27 17:44 GMT
திண்டிவனம்

திண்டிவனம் ஜெயபுரம் கர்ணாவூரை சேர்ந்தவர் ஜெயசீலன் மனைவி சரிதா. இவர் சாரம் பகுதியிலுள்ள ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சரிதா நேற்று முன்தினம் இரவு மயிலம் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் சரிதாவின் கையில் இருந்த செல் போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். பின்னர் இது குறித்து சரிதா கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல் போனை பறித்துச்சென்ற 3 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்