டிப்பர் லாரி மீது கார் மோதி வாலிபர் பலி

ஆற்காடு அருகே டிப்பர் லாரி மீது கார் மோதி வாலிபர் இறந்தார்.

Update: 2021-11-27 17:38 GMT
ஆற்காடு

ஆற்காடு அருகே டிப்பர் லாரி மீது கார் மோதி வாலிபர் இறந்தார். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 32). இவரது தம்பி பிரபாகரன், நண்பர் சந்திரன், ராமமூர்த்தி ஆகிய 4 பேரும் காரில் நேற்று  சென்னைக்கு சென்றுவிட்டு மீண்டும் வாணியம்பாடிக்கு வந்தனர். ராமமூர்த்தி என்பவர் கார் ஓட்டினார்.

நேற்று இரவு ஆற்காடு அருகே மேல்விஷாரம் தனியார் ஓட்டல் அருகே வரும்போது வேலூர் நோக்கி நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது கார் மோதியது. 

 இதில் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.. படுகாயமடைந்த ராமமூர்த்தி, பிரபாகரன், சந்திரன் ஆகிய 3 பேரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்